Sunday, February 09, 2020

On Sunday, February 09, 2020 by Tamilnewstv in ,    
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஓட்டுநர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தினர் 

திருச்சியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.                             தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்பு மாநில தலைவர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது...... தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்கள் வாகன ஓட்டுநர்களை மரியாதை குறைவாக நடத்துகின்றனர். மேலும் தகாத வார்த்தையால் பேசுகின்றனர். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும். ஓட்டுநர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். சங்க பொதுச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

0 comments: