Monday, February 10, 2020

On Monday, February 10, 2020 by Tamilnewstv in ,    
புதுகை சத்யமூர்த்தி அடுத்த தகவல்.
சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் எல்பின் நிறுவனத்தின் சார்பில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இத்தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனம் முறையாக நடத்தும் நிறுவனமா என்பதை அறிந்து முறையாக வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். ஆனால் ரமேஷ் குமார் அவர்கள் ஆசிரியராக உள்ள  பத்திரிகையில் நேர்மையாக செயல்பட்ட காவல்துறையினரை தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பத்திரிகையில் காவல்துறையினரை தவறாக பதிவு செய்துள்ளனர் .

முறைப்படி தாங்கள் மத்திய மாநில அரசுக்கு வரி செலுத்துகிறோம் கம்பெனி பதிவு செய்து உள்ளோம் என செய்தி வெளியிட்டு உள்ளனர். அவர்கள் பல கம்பெனியை தொடங்கி பொதுமக்களை  ஏமாற்றி உள்ளனர். முதலில் அவர்கள் எந்த கம்பெனி நடத்துகின்றார்கள்.  JP ஓரியண்ட் என்ற கம்பெனியும்   வரகா மணி என்ற கம்பெனியும், RMWC கம்பெனி எல்பின்  என்ற நிறுவனமும், தற்போது

குளோபல் டிரடிங், குளோபல் ரியாலிட்டி என்ற  பெயரில் கம்பெனி  தற்போது நடத்தி வருவதாக கூறுகிறார்கள். முதலில் தங்கள் கம்பெனி பெயரை உறுதியாக கூறட்டும். இவர்கள் பல வங்கிகளிலும் கணக்கு வைத்துள்ளனர் தங்கள் ஊழியர்களுக்கு இதில் ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்கிறார்கள். சரி இந்த பணப்பரிவர்த்தனை செய்ய உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. எதில் முதலீடு செய்து எதிலிருந்து எடுத்து கொடுக்கிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள். காவல்துறையை அவதூறு செய்தி வெளியிடும் அவர்கள் நடத்தி வரும் பத்திரிக்கை .  கடந்த சில நாட்களுக்கு முன்பு போலியாக பத்திரிக்கையாளர் யார் அவர்கள் மீது  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மாண்புமிகு நீதிபதி தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவில்  வழக்கில் உள்ள குற்றவாளி ரமேஷ் குமார் இவர் எப்படி  பத்திரிகையின் ஆசிரியரானார். ஒரு குற்றவாளி எப்படி பத்திரிகை நடத்த முடியும். தங்களையும், தங்களது நிறுவனத்தையும் பாதுகாத்துக்கொள்ள பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நடத்தி வரும் இவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேர்மையாகச் செயல்படும் காவல்துறையை குற்றம்சாட்டும் இவர்கள் மீதும் பத்திரிகை மீது நீதித்துறை நன்கு ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் என்பது எனது கருத்து. நன்றி ஜெய் ஹிந்த்

0 comments: