Monday, February 10, 2020

On Monday, February 10, 2020 by Tamilnewstv in ,    
உரிய சொத்து பங்கீடு வழங்க காவல்நிலையம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி.

திருச்சி துவாக்குடி தெற்குமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சேலம் உருக்காலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி சேலம் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மணிகண்டனின் தந்தை காமராஜ் தனது தாய் ராணியுடன் செய்துக்கொண்ட முதல் திருமணத்தை மறைத்து, லலிதா என்ற பெண்ணை 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டு, தற்போது லலிதாவிற்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த தாரத்தின் மகனான மணிகண்டனுக்கும், அவரது தாயாருக்கும் வழங்கவேண்டிய உரிய பங்கு வழங்காததாலும், இதற்கு முட்டுக்கட்டையாக இரண்டாம் மனைவி லலிதா மற்றும் உறவினர்கள் செயல்பட்டு வருவதாகவும், எனவே தங்களுக்கான உரிய பங்கு தொகையை பெற்றுத் தரக்கோரி திருவெறும்பூர் காவல் நிலையத்திலும், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் வழங்கப்பட்டுள்ளது. அப்போது கண்துடைப்புக்காக விசாரணையை மட்டும் நடத்திவிட்டு அதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்யாத நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்,

 இன்றைய தினம் மணிகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி மணிகண்டனை காப்பாற்றினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் ஆட்சியர் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் தீக்குளிப்பு முயற்சி செய்த மணிகண்டனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கைது செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: