Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
தமிழக மீனவர் பிரச்னை குறித்து சுப்பிரமணிய சாமி கூறியது பா.ஜ.க.வின் கருத்து அல்ல என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும், இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக் கொண்டு, மீனவர்களை மட்டும் உடனே விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு தான் ஆலோசனை வழங்கியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்திற்கு தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சுப்பிரமணிய சாமியின் கருத்து பா.ஜ.க.வின் கருத்தல்ல என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”பா.ஜ.க. தான் தமிழக மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் துன்பத்தையும், துயரத்தையும் தீர்ப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என யோசித்து வருகிறோம்.
இந்நிலையில், சுப்பிரமணிய சாமி சொன்னது பா.ஜ.க.வின் கருத்துக்கள் அல்ல. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவரின் இந்த பேச்சு தமிழக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என மேலிடத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம்” என்றார்.

0 comments: