Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணி அளவில் டெலிபோன் அழைப்பு வந்தது. கோர்ட்டு
ஊழியர் சுரேந்தர் போனை எடுத்து பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம வாலிபர் காலை 11 மணியளவில் தலைமை நீதிபதி அலுவலகம், ஐகோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த அவர் வெடிகுண்டு மிரட்டல் குறித்து அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். இதற்கிடையே அதே நேரத்தில் 108 ஆம்புலன்சு அலுவலகத்துக்கு பேசிய மர்ம ஆசாமி ‘‘ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். வெடித்து சிதறும்’’ என்று கூறி இணைப்பை துண்டித்தான்.
இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டிலும், ஆம்புலன்சு கட்டுப்பாட்டு அறைக்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போன் அழைப்பு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
எஸ்பிளனேடு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஐகோர்ட்டு முழுவதும் சோதனை செய்தனர்.
வக்கீல்கள் சேம்பர், கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனையிட்டனர்.
தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச் கோர்ட்டு அறையிலும் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது.
எந்தவித இடையூறும் இல்லாமல் போலீசார் சோதனை ஒருபுறத்திலும், வழக்கு விசாரணை மறுபுறத்திலும் நடந்தது.
வெடிகுண்டு மிரட்டலால் வழக்கு விசாரணையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஐகோர்ட்டு வளாகம் போலீசாரின் அதிரடி சோதனையால் பரபரப்பாக காணப்பட்டது.
ஐகோர்ட்டுக்குள் செல்லும் 4 வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் பொருத்தி தீவிர சோதனைக்கு பின்னரே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.
இதற்கிடையே மர்ம ஆசாமி மிரட்டல் விடுத்து பேசிய நம்பர் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. பாரிமுனை அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள கடையில் இருந்து மர்மநபர் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முக்கிய வழக்கு விசாரணையை தாமதப்படுத்த மிரட்டல் விடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: