Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
நிலஅபகரிப்பு வழக்கில் இடைக்கால முன் ஜாமீன் பெற்ற அழகிரி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி மதுரை, திருமங்கலம், சிவரக்கோட்டையில் இயங்கி வருகிறது.
இந்த கல்லூரிக்காக, அப்பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டதாக, இந்து அறநிலையத்துறை அதிகாரி, மதுரை புறநகர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மு.க.அழகிரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை ஏற்று, அந்நீதிமன்ற நீதிபதி அழகிரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
இந்நிலையில், மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் இன்று (2ஆம் தேதி) மு.க.அழகிரி ஆஜராகி கையெழுத்திட்டார்.

0 comments: