Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
மிழக உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத் தேர்தலில் பாஜகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடனான சந்திப்புக்கு பிறகு வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு அமைப்புப் பொதுச்செயலாளர் மோகன்ராஜூலு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று (02.09.2014) காலை 10.30 மணி அளவில் சந்தித்தனர்.
உள்ளாட்சி மன்றங்களின் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். இப்படி ஆதரவு கேட்க இருப்பதை அறிந்த நிலையில், அதுகுறித்து நேற்று நடைபெற்ற உயர்நிலைக்குழுக் கூட்டத்திலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆலோசனையின்படி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அதே அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளாட்சி மன்றங்களின் இடைத்தேர்தலில் ஆதரவு வழங்கும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்”. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: