Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    



பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதுப் பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
 
நாட்டில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத் திட்டங்களை இயற்றுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதில் மத்திய அரசின் முன்னாள் முதன்மை செயலர், ரமேஷ் சந்திரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் தன் அறிக்கையை, மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில், பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
 
அதில் சிகரெட்களை பாக்கெட்டில் பிரித்து விற்க தடை செய்ய வேண்டும். வயது வரம்பை 18 லிருந்து 25 ஆக அதிகரிக்க வேண்டும். 
 
பொது இடங்களில் புகைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதோடு அதை மீறுவோருக்கு 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க பட வேண்டும். பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை பிடிக்கும் அதிகாரத்தை, மேலும் பலருக்கு விரிவாக்க வேண்டும்.
 
அட்டைகளில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து இடம்பெற்றுள்ள படங்கள் 40 சதவீத இடத்தை பிடித்துள்ளன. அவற்றை 80 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். மேலும், அத்தகைய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

0 comments: