Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள இச்சிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் புவனேஸ்வரி(வயது 17). இவர் காங்கயம்–தாராபுரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பினார். பின்னர் குளியல் அறைக்கு சென்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் ஊதியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாணவி புவனேஸ்வரி எழுதிவைத்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் மாணவி என்ன எழுதியிருந்தார் என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். கடிதத்தின் அடிப்படையில் தான் விசாரிக்க உள்ளோம். விசாரணைக்கு பின்னர் தான் எதுவும் சொல்ல முடியும் என்று கூறிவிட்டனர்.
இந்த நிலையில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் திடுக் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவி புவனேஸ்வரிக்கும், அதே பள்ளியில் படிக்கும் பிளஸ்–2 படிக்கும் மாணவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதல் விவகாரம் அரசல் புரசலாக வெளியே தெரியவந்தது. பின்னர் பள்ளி முழுவதும் இந்த தகவல் கசிந்தது.
இதையறிந்த பள்ளியின் ஆசிரியையும், ஆசிரியரும் மாணவியை கண்டித்ததாக தெரிகிறது. அதன் பின்னரும் காதல் நீடித்ததாகவே தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ–மாணவிகள் முன்னிலையில் மாணவி புவனேஸ்வரியை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது.
மேலும் பிளஸ்–2 படிப்பு தான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கும், எனவே நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறும் வழியைப்பார் என்று அறிவுரை கூறியுள்ளனர். மற்ற மாணவ–மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர்கள் நம்மை அவமானமாக பேசி விட்டார்களே என புவனேஸ்வரி மனவேதனை அடைந்தார்.
வீடு திரும்பிய அவர் வாழ்க்கையை முடித்துக் கொள்வதென்ற முடிவுக்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கண்ட தகவல்கள் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் மூலம் வெளியானதாக தெரிகிறது.
மாணவி தீக்குளித்து இறந்த தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் மாணவி படித்த பள்ளிக்கு விரைந்து சென்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ–மாணவிகளிடம் விசாரித்தார். பின்னர் மாணவி புவனேஸ்வரியை மற்ற மாணவ–மாணவிகள் முன்னிலையில் திட்டிய ஆசிரியை மற்றும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். ஆசிரியர்கள் திட்டிய அவமானம் தாங்காமல் மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: