Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னாள் சிவன் கோயில் இருந்தது. அதனால் அதனை இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரிய மனுவினை ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
ஆக்ரா நதிக்கரையில் அழகுடனும், கம்பீரத்துடனும் அமைந்திருக்கும் தாஜ்மஹால் இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும், காதலர்களின் புனித சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்றது.
 

 
அதுமட்டுமல்லாமல் முகலாய அரசர் ஷாஜகான், தனது காதல் மனைவியான மும்தாஜின் நினைவாக எழுப்பியதாக வரலாறு. இந்நிலையில்தான் இந்த தாஜ்மஹாலை இந்துக்களிடம் ஒப்படைக்க சொல்லி மனுதாக்கல் செய்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.
 
ஆக்ரா உரிமையியல் நீதிமன்றத்தில் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் ஐவர், நேற்று ஆக்ரா நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘உத்தரப்பிரதேசத்தின், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள ஆக்ரா நகரில் கம்பீரமாக வீற்றிருக்கும் தாஜ்மஹால்.
 
அந்த இடத்தில் தாஜ்மஹால் உருவாவதற்கு முன்னதாகவே அக்ரேஷ்வர் மகாதேவ் என்னும் பழைமையான சிவன் கோயில் இருந்தது. எனவே, தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு செய்ய தடை விதித்து, தாஜ்மஹாலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாதத்துக்கு தேவையான வலுவான ஆதாரங்கள் உள்ளன’ என தெரிவித்திருந்தனர்.
 
இந்த மனுவினை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டதாக மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சிறுபாண்மையினத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வருத்தமளிப்பதாக உள்ளது. மேலும் தாஜ்மஹால் தனிப்பட்ட ஒரு மதத்திற்கு மட்டுமானதாக பார்க்காமல், இந்திய தேசத்தினுடைய ஒன்றாகவே மக்கள் இதுவரை கருதி வருகின்றனர். இதுபோன்ற செயலால் நாட்டில் பிரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு நிறுத்தும் என நம்பலாம்.

0 comments: