Sunday, October 19, 2014

On Sunday, October 19, 2014 by farook press in ,    
கடந்த 1–ந் தேதி முதல் காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் ஆத்திரமூட்டும் வகையில் தொடர் தாக்குதல்கள் நடத்தியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயம் அடைந்தனர். இந்தியாவும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தது. இதில் அந்த தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா விடுத்த எச்சரிக்கை காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் பாகிஸ்தான் அமைதியை கடைப்பிடித்து வருகிறது. ஆனாலும், அவ்வபோது பாகிஸ்தான் வேலையை காட்ட ஆரம்பிக்கிறது. இந்தியா பதிலடி கொடுக்கிறது.
இந்நிலையில் 'பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதலை முன்னெடுக்க முடியாது' என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் எல்லை நிலவரம் குறித்து பேசிய சுர்தாஜ் அஜிஸ், பாகிஸ்தானை குற்றம் சாட்ட, எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டத்திற்கு இந்திய அரசின் சதியே காரணம், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக, எல்லைப் பிரச்சனையை சுயநலத்திற்காகப் பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதலை முன்னெடுக்க முடியாது. அத்தகைய நடவடிக்கையில் பாகிஸ்தானின் பதிலடி தெரியும். எல்லையில் ராணுவம் முழு எச்சரிக்கையுடன் உள்ளது. சரியான பதிலடி கொடுக்கும் திறன் ராணுவத்திற்கு உள்ளது. இருநாடுகள் இடையில் நல்ல நட்புறவு இருந்தால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க சாத்தியம் உள்ளது.  என்று கூறியுள்ளார். 

0 comments: