Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி சென்னை புறநகர் பகுதியில் அ.தி.மு.க.வினர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நந்தம்பாக்கத்தில் மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான எஸ்.ராஜசேகர் தலைமை தாங்கினார். மண்டலக்குழு தலைவர் பரிமளா நந்தகுமார், கவுன்சிலர்கள் ஹேமாபரணிபிரசாத், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள் ப.தன்சிங், வி.என்.பி.வெங்கட்ராமன், ஒன்றிய தலைவர் என்.சி.கிருஷ்ணன், பட்ரோடு தேன்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மூவரசம்பட்டில் மாவட்ட பாசறை செயலாளர் கோவிலம்பாக்கம் ராஜேஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அப்போது மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்தவச்சலம் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் 10 பேர் மொட்டை போட்டுக்கொண்டனர்.
கொட்டிவாக்கத்தில் பெருங்குடி மண்டலக்குழு தலைவர் கொட்டிவாக்கம் ராஜாராம் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் டி.வி.நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஆலந்தூர் நகர ஜெயலலிதா பேரவை சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. மாநகராட்சி கவுன்சிலரும், பேரவை செயலாளருமான சீ.வேம்பரசன் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் என்.தனசேகரன், எஸ்.வரதராஜன், பி.சிவராஜ், ஜி.பி.குணா, எம்.எச்.உமர்கத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 5 அ.தி.மு.க. தொண்டர்கள் மொட்டை போட்டுக் கொண்டனர்.
தென்சென்னை மாவட்ட இலக்கிய அணி சார்பில், ஜெயலலிதா விடுதலை கோரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஷேக்அலி, மஜித் ஆகியோர் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.செந்தமிழன், எம்.கே.அசோக், மாநகராட்சி கவுன்சிலர் என்.எஸ்.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நந்தம்பாக்கத்தில் அ.தி.மு.க. செயலாளர் பர்மா கண்ணன் 108 அலகு குத்தி கொண்டு தேர் இழுத்தார். நீலாங்கரையில் சென்னை மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவர் நீலாங்கரை முனுசாமி தலைமையில் மனித சங்கிலி பேரணி நடந்தது. கோவிலம்பாக்கம் ஊராட்சி அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து மணலியில் அ.தி.மு.க.வினர் மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் தலைமையில் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜோசப், எஸ்.ஆர்.ரவி, சங்கர் உள்பட 101 அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்துக்கொண்டனர். மேலும் மும்மத வழிபாடும், யாக சாலை வழிபாடும் செய்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.குப்பன், மண்டலக்குழு தலைவர் தங்கசிவம், நகர செயலாளர் டாக்டர் கே.சி.சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அனைவரும் ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல எண்ணூரில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வம், எழிலரசி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
அம்பத்தூரில் நகர அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூர் ஓ.டி.பஸ்நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அம்பத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

0 comments: