Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
டெல்லியில் ஆட்சி அமைக்க கோரி பாரதீய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், பா.ஜனதா 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜனதாவின் கூட்டணியான அகாலி தளத்துக்கு ஒரு இடமும் கிடைத்தது. காங்கிரஸ் 8 இடங்களும், ஐக்கிய ஜனதாதளத்துக்கும், சுயேச்சைக்கும் தலா ஒரு இடமும் கிடைத்தன.
காங்கிரஸ் ஆதரவுடன் முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி 47 நாட்கள் மட்டுமே நீடித்தது. மாநிலத்தில் வலிமையான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவு தரவில்லை என்று கூறி கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இதன்பின்பு, அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி எடுத்து வந்த தொடர் முயற்சிகள் கைகூடவில்லை.
இந்த நிலையில், 29 உறுப்பினர்களுடன் தனிபெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதாவை டெல்லியில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதற்கு, ஜனாதிபதியிடம் டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி கேட்டு  கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   
டெல்லி ஆளுநர்  பரிந்துரையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் ஆட்சி அமைக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோமா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம் என்று டெல்லி பாரதீய ஜனதா தலைவர் சதீஷ் உப்தாயா தெரிவித்துள்ளார். 
இதனிடையே பாரதீய ஜனதா  அரைகுறையான அரசை உருவாக்க எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிப்பதாகவும், துணை நிலை ஆளுநர் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் ,பாரதீய ஜனதாவின் ஆணையின் பேரில் துணை நிலை ஆளுநர் செயல்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆஸ்தோஷ் தெரிவித்துள்ளர்.

டெல்லியில் மறுதேர்தல் நடத்த கோரி அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசரணை வரும் 9 ஆம் நடைபெறவுள்ளது. இதனால் இதற்கு முன்னதாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது

0 comments: