Friday, September 05, 2014
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.
நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாங்குநேரியில் ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவில் மடாதிபதியை நெற்றியில் விபூதியுடன் சென்று கமல் சந்தித்தார்.
அந்த கோவிலுக்கு உள்ளே ஆண்கள் செல்லும்போது மேலாடை அணிந்து செல்லக்கூடாது. வேட்டி மட்டும் தான் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் அணிந்து செல்லவும் தடை இருக்கிறது. இது காலங்காலமாக அந்த கோவிலின் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கமல் அந்த மரபை மீறி மேலாடை அணிந்து சென்றார் என்று நெல்லை மாவட்ட மக்கள் கோவில் நிர்வாகத்தின் மீதும், கமல் மீதும் கடும் கொந்தளிப்பை உண்டாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குதொடரப்போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சரி… அது இருக்கட்டும்… இதுவரை கடவுளே இல்லையென்று சொல்லிவந்த கமலஹாசன், சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களுக்கு அவரே பூஜை போட்டார். பட பூஜை மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டிருப்பார் என அது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. தற்பொழுது கமல் நெற்றியில் விபூதியுடனும், கையில் தட்சனையுடனும் கோயில் மடாதிபதியை சந்தித்து அருள்வாக்கு பெற்றதான் காரணம் என்ன.
ஒரு வேலை நாத்திகம் போரடித்ததால், ஆன்மீகத்திற்கு திரும்பிவிட்டாரா? அல்லது தான் ஒரு நாத்திகவாதி என இதுவரை மக்களை ஏமாற்றி வந்துள்ளாரா? கமல்ஹாசனின் உண்மை முகம் எது எனவும் பொதுமக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment