Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 18–வது வார்டு ராக்கியகவுண்டன்புதூர், மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை 40–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் நேற்று காலை சமையலர் ஜெயம்மாள் (வயது 57) சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று சத்துணவு கூடத்தின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் சமையல் செய்து கொண்டிருந்த ஜெயம்மாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சத்துணவு கூடத்தில் ஏற்கனவே கடந்த 6 மாதத்துக்கு முன்பு சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்து அவர் காயம் அடைந்தார். அப்போது இதுகுறித்து மன்ற கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் கலைவாணி ஜோதி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் 2–வது முறையாக இந்த சத்துணவு கூட மேற்கூரை நேற்று பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments: