Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
புதுடெல்லியில் விபசார வழக்கில் சேர்த்துவிடுவோம் என்று வீடியோ எடுத்து தொழில் அதிபரை மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்த ஜாஸ்பிரீத் என்ற துணிக்கடை அதிபர் தொழில் ரீதியாக புதுடெல்லி வந்துள்ளார். அப்போது அவர் தங்கியிருந்த ஓட்டலில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வந்தனா ராவ் தலைமையில் ரெய்டு நடந்தது. ஓட்டலில் விபசாரம் நடப்பதாக கூறி ரெய்டு நடத்திய போலீஸ் ஜாஸ்பிரீத் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளது. அப்போது அவர் வெளியே வந்ததும், விசாரணைக்கு வருமாறு அவரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அவர் ஓட்டலில் இருந்து வெளியே வரும்போது, மற்றொரு ஜோடியுடன் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த காட்சிகள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 
பின்னர் போலீசார் ஜோடியை ஒரு ஜீப்பிலும், தொழில் அதிபர் ஒரு ஜீப்பிலும், அழைத்து சென்றுள்ளனர். தொழில் அதிபர் சென்ற ஜீப்பை போலீஸ் நிலையம் கொண்டு செல்லாமல் தனிமையான பகுதியில் நிறுத்தியுள்ளனர். அப்போது வீடியோவில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, தொழில் அதிபரிடம் பணம் தருமாறு வலியுறுத்தியுள்ளனர். ரூ. 2 லட்சம் தரவேண்டும் என்று தொழில் அதிபரை போலீஸ் மிரட்டியுள்ளது. பணம் தரவில்லை என்றால் விபசார வழக்கில் சேர்த்துவிடுவோம் என்று தொழில் அதிபரை போலீசார் மிரட்டியுள்ளனர். உடனடியாக பயந்துபோன தொழில் அதிபர் ஜாஸ்பிரீத் ரூ. 40 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், பணத்தை திருப்பி செலுத்திவிடுவேன். என்று கூறி அங்கிருந்து ஓட்டலுக்கு வந்துள்ளார். 

ஓட்டலில் இருந்த ஊழியர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். அப்போது, சம்பவம் குறித்து கிரிமினல் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கிரிமினல் பிரிவு போலீசார், தொழில் அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வந்தனா ராவ் மற்றும் கான்ஸ்டபிள் 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

0 comments: