Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமுகமான கன்னடப் படம் ‘பவர்’. அங்கு பல சாதனைகளைப் புரிந்து வருகிறதாம் த்ரிஷாவின் படம். 80 வருட கன்னட சினிமா வரலாற்றில் மிகப் பெரிய ஓபனிங் கிடைத்த படம் என்ற சாதனையை ‘பவர்’ திரைப்படம் புரிந்திருக்கிறதாம். 275 திரையரங்குகளுக்கும் மேல் வெளியான ‘பவர்’ படம் மூன்று நாட்களுக்குள்ளாகவே சுமார் 7 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் வெளியான முதல் நாளன்றுதான் அதிகமான வசூலைத் தரும். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் முதலிரண்டு நாள் வசூலை விட மூன்றாம் நாள் வசூல்தான் அதிகமாக இருந்ததாம். இதுவும் ஒரு சாதனை என்கிறார்கள்.
இந்த வருடத்தில் இதற்கு முன் சுதீப், வரலட்சுமி நடித்து வெளிவந்த ‘மானக்யா’ படம்தான் இதுவரை வந்த கன்னடப் படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த படமாக இருந்ததாம். அந்த சாதனையை ‘பவர்’ படம் முறியடித்து விடும் என்கிறார்கள். ஒரு நாளைக்கு 1060 காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் திரையிடப்படுகிறதாம். இந்த படத்தின் வெற்றி மூலம் த்ரிஷாவிற்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம். அவருக்கென்றும் ரசிகர் கூட்டம் உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். இனி, த்ரிஷா கன்னடப் படங்களிலும் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வரும் என்கிறார்கள். ஆனால், தமிழ், தெலுங்கை விட அங்கு சம்பளம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். அதற்கு சம்மதித்து த்ரிஷா தொடர்ந்து கன்னடப் படங்களில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. பணமா, படமா..எதை த்ரிஷா தேர்வு செய்வார் என்று பார்ப்போம்.

0 comments: