Thursday, May 12, 2016

On Thursday, May 12, 2016 by Unknown in ,    




தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, மே 14-ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதற்கு பிறகு செய்ய வேண் டியவை, செய்யக் கூடாதவை குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெ ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல், 16-ம் தேதி திங்கள்கிழமை, காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடக்கும். 14-ம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-ன் கீழ் விதிமுறைகள் செயலில் இருக்கும்.
* தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டம், ஊர்வலத்தை யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
* எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், ட்விட்டர் போன்ற சாதனங்கள் வாயிலாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பும் இதில் அடங்கும்.
* தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் அல்லது அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியவர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதவர்கள் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
* திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் ஆகிய இடங்களில் வெளி யாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என ஆய்வு செய்யப்படும்.
* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் 14-ம் தேதி மாலை 6 மணி முதல் செயல்திறன் அற்றதாகிவிடும்.
* வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் அவரது பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், தேர்தல் முகவர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், சட்டப்பேரவை தொகுதிக்கானஅவரது பணியாளர்கள் அல்லது கட்சிப் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு மற்றொரு வாகனம் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தனி அனுமதி பெறலாம்.
* வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவும், அழைத்துச் செல்லவும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ, வாங்கவோ, பயன்படுத்தவோ அனுமதியில்லை. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
* 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட் டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
* 14-ம் தேதி மாலை 6 மணிமுதல் 16-ம் தேதி மாலை 6 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்தவும், முடிவுகளை வெளியி டவும் தடை விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 4-ம் தேதி காலை 7 மணி முதல் மே 16-ம் தேதி மாலை 6.30 மணிவரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத்தில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி உத்தரவிட்டார். இதன்படி, மாவட்ட தேர்தல் நிர்வாகம் மற்றும் மின்வாரியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் விசாரித்து, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். தற்போது, தமிழக தேர்தல்துறைக்கு வரும் புகார்கள் அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது

0 comments: