Wednesday, December 17, 2014

On Wednesday, December 17, 2014 by farook press in ,    
தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இந்த ஆண்டுடன் முடிவடைவதால்புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டியிருக்கிறதுஎனினும் தற்காலிக ஏற்பாடாக வரக்கூடிய ஆண்டிற்கு உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு அறிவித்துள்ளதுஇதன்படி உள்தாள் ஒட்டுதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் டிசம்பர் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டுவதற்குஅந்த குடும்ப அட்டையின் புகைப்படத்தில் உள்ள குடும்பத் தலைவர் /தலைவி மட்டுமே நேரில் வர வேண்டும் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர்இதனால் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோர் உள்தாள் ஒட்ட இயலாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில்குடும்ப அட்டையின் புகைப்படத்தில் உள்ளவர்கள் மட்டுமே நேரில் வந்து உள்தாள் ஒட்டிச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு ஏராளமானவர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்துகிறதுபலர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
போலி குடும்ப அட்டைகளை தவிர்ப்பதற்காக இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குடுமைப்பொருள் வழங்கல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்ஆனால் புதிதாக குடும்ப அட்டைகள் பெறும்போதே ஊழல் நடைமுறையை களைந்தால்தான் போலி அட்டைகளை ஒழிக்க முடியும்ஏற்கனவே பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் நடைமுறையை கடுமையாக்குவதன் மூலம் போலி அட்டைகளை ஒழிக்க முடியாதுமாறாகசாமானிய மக்களுக்கு வேலை இழப்பையும்அலைக்கழிப்பையும் தான் ஏற்படுத்தும்.
எனவே விதிமுறையை தளர்த்தி குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் வந்தால் உள்தாள் ஒட்டிக் கொள்ளலாம் என்றுஅறிவிக்க வேண்டும்ஏழைஎளிய சாமானிய மக்களின் வேலை இழப்பையும்அவர்கள் அலைக்கழிக்கப்படுவதையும் தவிர்க்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்கேட்டுக் கொள்கிறது.
என,
கே.காமராஜ்
மாவட்டச் செயலாளர்

0 comments: