Wednesday, December 17, 2014
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியின் பகுதியாக மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழங்கரை ஐ.கே.எப்.வளாகத்தில் நடைபெற்றது.இதில் குமரன் ரோட்டில் இருந்து காசிபாளையம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க தன்னிறைவு திட்டத்தில் ரூ.1 கோடியே, 67 லட்சமும், திருப்பூர் காவலர் குடியிருப்பில் பூங்கா அமைக்க ரூ.6 லட்சமும் நிர்வாகத்திடம் காசோலையாக வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் பப்பீஸ் ஏ.சக்திவேல் தலைமை தங்கினார். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்களிடம் சாலை அமைப்பது, காவலர் குடியிருப்புக்கு பூங்கா அமைப்பதற்கு ஏற்றுமதியாளர் சங்கத்தினர் நிதி உதவி மற்றும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசு, தொழில்கள் வளர தேவையான நல்ல சூழ்நிலையை உருவாக்கி தந்து உள்ளது. திருப்பூரின் ஏற்றுமதி தொழிலை பொறுத்தவரை நேரம் தவறாமை அவசியம் என்பதை உணர்ந்து, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.ஏற்றுமதியாளர் சங்கத்தினரே மக்கள் முதல்வர் ஜெயலலிதா ரூ 200 கோடி கொடுத்த பின்னர் தான் திருப்பூர் தொழில் மீண்டது என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.ஏற்றுமதியாளர்களுக் கு ரூ.1800 கோடி சலுகை தொகைகள் தரப்பட்டுள்ளன.அவர் தேவையான நிதி உதவிகளை அளித்த படியால் ரூ.21ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
திருப்பூரை தாண்டி தென் மாவட்டங்களுக்கு நீங்கள் தொழில் செய்ய வரும்போது தொழிலாளர் பற்றாக்குறை தீர்க்கப்படும். தொழிலாளர்கள் எங்கு அதிகம் உள்ளனரோ அங்கு சென்று தொழில் தொடங்க முன் வந்தால் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை தீரும். தென்மாவட்டங்களில் தொழில் துவங்க முன் வந்தால் நிலத்தின் பதிவு மதிப்பு 50 சதவீதமாக குறைக்கப்பட்டும்.வாட் வரி சலுகை கிடைக்கவும் மக்கள் முதல்வரின் அரசு வழி வகை செய்யும்.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் குறைந்த அளவில் மின்கட்டணம் நடைமுறையில் உள்ளது. திருப்பூரில் தொழிலாளர்களுக்கு மகளிர் தங்கும் விடுதி கட்ட ஜெயலலிதா அறிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர் அதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளார். தொழிலாளர்களை தங்க வைத்து பராமரிக்கும் பணியை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ள முன் வந்தால் அரசு, விடுதி கட்டடத்தை கட்டித்தர தயாராக உள்ளது.
வருகிற மே மாதம் தொழில் முனைவோர் மாநாட்டை மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசு நடத்துகிறது. அந்த மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டு தொழில் தொடங்குங்கள்.வேறு எங்கும் செல்லாமல் தமிழகத்திலேயே தொழில் முதலீடு செய்யுங்கள்.2001-06 ஜெயலலிதா ஆட்சியில் நோக்கியா கம்பெனி தமிழகம் தான் சிறந்த இடம் என தேர்வு செய்து தொழிலை துவக்கினார்கள். தினமும் 6 லட்சம் போன்களை தயாரித்து கொண்டு இருந்தனர். 2012 ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்து ரூ.2080 கோடி வரி கட்ட வேண்டும் என கூறி நோக்கியா கம்பெனியை மூட வைத்த பெருமை காங்கிரஸ், தி.மு.க.கூட்டணி கட்சியை சாரும்.
தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான அரசாக ஜெயலலிதா அரசு இருக்கிறது. தொழிலுக்காக நீங்கள் கேட்பதை செய்து தர ஜெயலலிதா தயாராக இருக்கிறார். அவர் நான்கு அமைச்சர்களை அனுப்பி தொழில் பிரச்சினைகளை கேட்டறிந்து வரச்சொன்னார் என்றால் எந்தளவுக்கு அவர் இந்த தொழில் மீது அக்கரையுடன் இருகிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.அரசு துறை சார்பிலும் கூட்டு முதலீடுகள் அமைத்து தென் மாவட்டங்களில் தொழில் துவக்க இந்த அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.
ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ரூ.63 ஆயிரத்து, 130 கோடி முதலீட்டில் 63 லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர். 18 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகமும், ரூ.7 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் செய்யும் திருப்பூர் நகரம் என அறிகிறேன்.தமிழ்நாட்டில் 9.68 லட்சம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 23, 508 குறு சிறு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூரில் தற்போது நீட்ஸ் என்கிற திட்டம் மூலம் சென்னை, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் பெண்களுக்கான சிறப்பு வர்த்தக முறை ஜெயலலிதா உருவாக்கப்பட்டு 95 ஆயிரம் சிறு தொழில் நிறுவனக்கள் துவக்கப்பட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது. 3.8 கோடி ரூபாய் வேலையில்லாதவர்களுக்கு மானியமாக அளிக்கப்பட்டு உள்ளது. ரூ.115.91 கோடி மானியத்தை இந்த மாவட்டத்தில் மட்டும் மக்கள் முதல்வர் அரசு வழங்கி இருக்கிறது.
தொழிலாளர்களுக்கு நோய்கள் ஏற்படுகிறபோது அதை எளிதில் தீர்க்க இ.எஸ்.ஐ.,மருத்துவமனையை ஜெயலலிதா வழங்கி இருக்கிறார். திருப்பூரில் 100 படுக்கைகளுடன் மிகப்பெரிய மருத்துவமனை விரைவில் துவங்கப்பட உள்ளது. தொழிலாளர் துறைக்கு ஜெயலலிதா பல்வேறு அறிவிப்புகளை வழங்கினார். அங்கன்வாடிகள் 50 அமைக்க உத்தரவிட்டுள்ளார். நடமாடும் மருத்துவமனைகள் அமைக்க உத்தரவிட்டிருக்கிறார்..உங்கள் தொழில் இடர்பாடுகள் அனைத்தும் தீர்க்கும் ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.இவ்வாறு அமைச்சர் ப.மோகன் பேசினார்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பேசியதாவது:-
பின்னலாடை தொழில் மூலம் பல்வேறு சாதனை படைத்து திருப்பூர் நகரம் தொழிலில் சிறக்க காரணம் மக்கள் முதல்வர்தான்.இந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடிக்கு அந்நிய செலாவணியை தரும் நகராக திருப்பூர் மாறி இருக்க காரணம் தொழில் சிறப்பாக நடத்த காரணமான ஏற்றுமதியாளர் சங்கமும், அவர்களுக்கு ஜெயலலிதா அரசு தந்த ஊக்கமும் உறுதுணையும் தான். திருப்பூரில் இந்த தொழிலை முன்னேற்றுவதற்காக அண்ணா தி.மு.க.ஆட்சி எப்போது எல்லாம் பொறுப்பேற்கிறதோ அப்போது எல்லாம் ஜெயலலிதா திருப்பூர் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தந்து உள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மட்டும் தான் திருப்பூருக்கு பல்வேறு திட்டங்கள் தரப்பட்டுள்ளன. 991-96ம் ஆண்டு ஆட்சி காலத்தில் ஜெயலலிதா ரெயில்வே மேம்பாலம் திருப்பூரில் உருவக்கப்பட்டது. புதிய பஸ் நிலையம்குமரன் மகளிர் கல்லூரி ஆகியன உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் திருப்பூர் நகர மக்களுக்காக ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இனைந்து 3வது குடிநீர் திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிரது. இவற்றுக்கெல்லாம் காரணம் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான் என்பதை திருப்பூர் மக்கள் மறந்து விட முடியாது. அவரது ஆட்சிக்கு முன்னர் திருப்பூர் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தது என்பது தொழில் முனைவர்களான உங்களுக்கு நன்றாக தெரியும்.
ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக சாய பட்டறை பிரச்சினைக்கு தீர்வு காண்போம் எனகூறி சென்றார். திருப்பூர் வடக்கு தொகுதியில் நான் போட்டியிட்டேன் எனக்கு அதிக வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்தீர்கள். உடனடியாக முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து திருப்பூர் சாயா, சலவை பட்டறைக்கு தீர்வு காண உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தொழிலும் பாதிக்கப்படக்கூடாது. விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் ஆய்ந்து ரூ.200 கோடி வட்டியில்லா கடனாக கொடுத்து ஜெயலலிதா இந்த தொழிலை வாழ வைத்துள்ளார்.அவர் இன்னும் பல்வேறு திட்டங்கள் தொழில் துவங்கவும், தொழில் சிறக்கவும் தொடர்ந்து வழங்கி வருகிறார்,.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
சுற்று சூழல் துறை அமைச்சர் தொப்பு என்.டி.வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பேசியதாவது:-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படியான இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இன்ரைக்கு ஜெயலலிதா ஜீரோ டிஸ்சார்ஜ் என்ற முறையை அமல்படுத்தியதன் மூலமாக இன்று நொய்யல் ஆற்றில் நல்ல தண்ணீர் ஓடுகிறது. 8000 டி.டி.எஸ். அளவில் இருந்த நொய்யல் ஆற்றின் தண்ணீர் மாசு ஜெயலலிதா நடவடிக்கையால் 2000 டி.டி.எஸ்.க்கும் குறைவாக உள் ளது. அதே நேரம் தொழிலும் முழுமையாக இயங்கி வருகிறது. மின்சாரம் தடையில்லா நிலையை உருவாக்கி ஜெயலலிதா ஆட்சியில் தான் இன்று நீங்கள் தொழிலை சிறப்பாக நடத்தும் நிலையை எட்டி இருக்கிறீர்கள். காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் காற்றுமாசு கட்டுப்படுத்தும் கருவிகள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரிண்டிங் தொழிற்சாலிகளில் ஆர்.ஓ., சுத்திகரிப்பு கருவிகளை அமைக்க உடனடியாக இந்த அரசு அனுமதி வழங்கும். மின் வெட்டு இல்லாத மாநிலம் தமிழகம்தான்.திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து உதவிகரமாக இருந்து ஏற்றுமதி இலக்கை எட்ட தொடந்து ஒத்துழைப்பு வழங்கும்.எனவே நீங்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு ஒத்துழைப்பு தந்து உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசினார்.
ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் பப்பீஸ் ஏ.சக்திவேல் பேசும்போது,
திருப்பூர் ஏற்றுமதி வளர்ச்சியில் தமிழக அரசின் பங்கும், உதவியும் ஏராளமாக கிடைத்து இருக்கிறது.திருப்பூர் பின்னலாடை தொழில் கடந்த 3 ஆண்டுக்கு முன்னால் கேள்வி கூறியாக இருந்தது. முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற 3 வது நாளில் இதற்கு உடனடி தீர்வு கண்டார்.இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.25 ஆயிரம் கோடி பின்னலாடை ஏற்றுமதி மூலம் எட்டுவோம். திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடை கொண்டு செல்ல தூத்துக்குடி துறைமுகம் செல்ல வேண்டியுள்ளது. அதற்காக தூத்துக்குடி சாலையை அகலபப்டுத்தி தஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்டும் வரிச்சlலுகையில் ரூ.300 கோடி நிலுவையில் உள்ளது.அவற்றை தமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு மின்கட்டண உயர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைமை உரையில் பேசினார்.
விழாவில் திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், சத்யபாமா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பரமசிவம், கருப்பசாமி, மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன்ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொழில் அதிபர்கள் அகில் ரத்தினசாமி, சுதாமா கோபாலகிருஷ்ணன், ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, எம்பரர் பொன்னுசாமி, கே.எம்.நிட்டிங் சுப்பிரமணியம், எஸ்பி என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், இளம் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் அருண், டிப் சங்க தலைவர் அகில் மணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத் தலைவர் ஈஸ்ட்மென் சந்திரன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
0 comments:
Post a Comment