Saturday, March 28, 2015

On Saturday, March 28, 2015 by Unknown in ,    
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் குண்டம், தேர்த் திருவிழா ஏப்ரல் முதல் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 7-ஆம் தேதி பக்தர்கள் குண்டம் இறங்குதலும், திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெற உள்ளது. 8-ஆம் தேதி சேஷ வாகனத்திலும், 9-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 10-ஆம் தேதி புலி வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது. 11-ஆம் தேதி, மகா தரிசனம், மறு பூஜை, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது.
இவ்விழாற்கான ஏற்பாடுகளை, பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரவணபவன், தக்கார் அழகேசன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்

0 comments: