Tuesday, December 22, 2015

On Tuesday, December 22, 2015 by Tamilnewstv in    
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகசி பெருவிழாவின் பகல்பத்து ந்pகழ்ச்சியின் கடைசி நளான ஞாயிற்றுகிழமை நீண்ட கூந்தலுடனான மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் நம்பெருமாள் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருத்தலமாக விளங்கும் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நாள்கள் தான் இதில் மிக முக்கிய விழாவாக கொண்டாடப்படுவது வைகுந்த ஏகாதசி பெருவிழா
இந்த விழா பகல் பத்து இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் பகல்பத்தின் போது நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் நிகழாண்டு வைகுந்த ஏகாதசி பெரு விழா கடந்த 10 ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து விழா கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று  வந்தது இதன் கடைசி நாளான ஞாயி;ற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிந்து நீண்ட கூந்தலுடன் மோகினி அலங்;காரத்தில் கையில் க்pளி பதக்கத்துடன் பல்வேறு தங்க ஆபரணங்களுடன் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்துக்கு காலை 7 மணிக்கு வந்தடைந்தார் தொடர்ந்து பக்தர்கள் சேவையும் அரையர்கள் சேவையும் நடைபெற்றது. ;நம்பெருமாள் மோகிணி அலங்காரத்தை யொட்டி மூலவரின் முத்தங்கி சேவை காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே நடைபெற்றது.
இராபத்து விழாவி;ன் முதல் நாளும் வைகுந்த ஏகாதசியி;ன் முக்கிய நிகழ்வுமான பரமபதவாசல் திங்கள்கிழமையான இன்று காலை 5 மணிக்கு நடைபெற்றுது. இதில் நம்பெருமாள் ஆண்டில் ஒருநாள் மட்டும் அணியும் ரத்ன அங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் இதைத்தொடர்ந்து பரமபதவாசல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் முத்தங்கி சேவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது  இராபத்து விழாவின் பத்து நாள்களும் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். புரமபதவாசல் திறப்பில் கலந்து கொள்ள ஏரளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தடைகின்றனர் அதனல் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

0 comments: