Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown   


வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி இறந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோட்டி என்பவரின் மகன் லட்சுமணன் 23.3.2014 அன்று சிறு மின்விசை மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், குண்டலூர் கிராமத்தைச் சேர்ந்த மார்கண்ட மேஸ்திரி என்பவரின் மகன் சங்கரய்யா 4.5.2014 அன்று தாதிரெட்டி பல்லி கிராம ஏரி கரை அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் மஜ்ரா ராமாபுர கிராமத்தைச் சேர்ந்த வேம்பன் என்பவரின் மகன் மாசிலாமணி 4.5.2014 அன்று வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரை

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் முத்துமாரி 3.5.2014 அன்று சிவரக்கோட்டை கிராமம், அருள்மிகு சங்கையா திருக்கோவில் அருகே விளம்பர பலகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், வண்டிக்கல் கிராமத்தைச் சேர்ந்த மார்கபந்து என்பவரின் மகன் பலராமன் 6.5.2014 அன்று விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருக்காட்டுப்பள்ளி சரகம், விஷ்ணம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சிவக்குமார் 6.5.2014 அன்று வீட்டினருகே இருந்த மின்சார கம்பத்தில் ஏறிய போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

சேலம்

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், எம்.செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜீ என்பவரின் மனைவி ரஞ்சிதம்மாள் 7.5.2014 அன்று வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் வட்டம், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் அண்ணாமலை 7.5.2014 அன்று எம்.ஆர்.பள்ளி அருகே தாழ்வாக இருந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சித்திரைச்சாவடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் பிரகாஷ் 8.5.2014 அன்று விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், திருவெண்ணெய் நல்லூர் கிராமத்தில் வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வெள்ளிதிருமுத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் முருகேசன் 12.5.2014 அன்று மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இச்செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக் கையில் தெரிவித்துள்ளார்.

0 comments: