Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by TAMIL NEWS TV in , , ,








ஈரோடு புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாளான (7.8.14) இன்று ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்திருந்தனர்.
நூற்றுக்கணக்கான மாணாக்கர்கள் ரூ.250/- க்கு மேல் புத்தகங்களை வாங்கிச் சென்று பேரவையின் சார்பில் வழங்கப்படும் ‘நூல் ஆர்வலர்’ சான்றிதழைப் பெற்றுச் சென்றனர்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்டுள்ள ‘பணியும் பாதையும்’ அரங்கினை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டுகளித்தது மட்டுமின்றி  வெகுவாகப் பாராட்டினர்.


'உலகத்தமிழர்களெல்லாம் ரிடத்தில்' என்பதற்குச் சாலப்பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ள தமிழவேள்
கோ. சாரங்கபாணி நினைவு உலகத்தமிழர் படைப்பரங்கத்தை மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து  வருகைப் புரிந்திருந்த தமிழறிஞர்களும், புத்தக ஆர்வலர்களும் வியந்து வியந்து கண்டுகளித்தனர்.

ஈரோடு புத்தகத் திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்குஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு எஸ்.சிவானந்தன் அவர்கள் தலைமை வகித்தார்.

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் தாளாளர் திரு ஆர். மோகன்ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர்
. ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரை ஆற்றினார்.

விழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 'கசடறக் கற்க' என்றும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றுச் சிறப்புரையைக் கேட்டு மகிழ்ந்தனர்.