Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    
உடுமலை அருகே நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கேரளாவை சேர்ந்த சஜீத் முதல் பரிசு பெற்றார்.
உடுமலை பி.எம்.டபிள்யூ பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 7–வது ஆண்டு மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் உடுமலையை அடுத்துள்ள சின்னவீரம்பட்டியில் நேற்று நடந்தது. போட்டிகளை உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.நாகராஜன் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பி.எம்.டபிள்யூ பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சவுந்திரராஜன் வரவேற்றார்.
போட்டிகள் இந்தியன் ஓபன் கிளாஸ், ஓபன் கிளாஸ், எக்ஸ்பர்ட் கிளாஸ், நோவைஸ் கிளாஸ், பிகினர்ஸ் உள்ளிட்ட 8 பிரிவுகளில் நடந்தது. இந்த போட்டிகளில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மோட்டர் சைக்கிள் வீரர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் சீறி பாய்ந்தனர். இலக்கை சென்றடைய மண்ணில் புழுதியை கிளப்பியபடி சென்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்தியன் ஓபன் கிளாஸ் போட்டியில் கேரளாவை சேர்ந்த சஜீத்திற்கு முதல் பரிசாக பி.எம்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ரூ.12 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கோவை போத்தனூரைச் சேர்ந்த ஆனந்த்துக்கு 2–வது பரிசாக ரூ.8 ஆயிரமும், கேரளாவை சேர்ந்த மகேஷ்க்கு 3–வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
ஓபன் கிளாஸ் போட்டியில் கேரளாவை சேர்ந்த மகேசுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், சஜீத்துக்கு 2–வதுபரிசாக ரூ.5 ஆயிரமும், கோவையை சேர்ந்த ஜெகதீசுக்கு 3–வது பரிசாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட்டது.
எக்ஸ்பர்ட் கிளாஸ் போட்டியில் சஜீத்துக்கு முதல் பரிசாக ரூ.8 ஆயிரமும், மகேசுக்கு 2–வது பரிசாக ரூ.5 ஆயிரமும், கோவை போத்தனூரை சேர்ந்த ஆனந்துக்கு 3–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், நோவைஸ் கிளாப் போட்டியில் கோவை வீரர்களான எஸ்.பாண்டியனுக்கு முதல் பரிசாக ரூ.6 ஆயிரமும், நவநீதனுக்கு 2–வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3–வது பரிசாக விக்ரமுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.

0 comments: