Tuesday, September 27, 2016

On Tuesday, September 27, 2016 by Unknown in    

திருப்பூர்திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே திருப்பூர் மாநகர போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினர், அதன் சார்பு அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகள் ஆங்காங்கே வைத்துள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் பெயர் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கிகள் மற்றும் படைக்கலன்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் அல்லது அனுமதி பெற்ற படைக்கலன் பாதுகாப்பு மையங்களில் தங்களுடைய துப்பாக்கிகளை உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது

0 comments: