Tuesday, September 27, 2016

On Tuesday, September 27, 2016 by Unknown in    

திருப்பூர்உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 3–ந் தேதி கடைசி நாள் ஆகும். அரசு விடுமுறை அல்லாத நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு பெறப்படும்.இதையொட்டி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வேட்பு மனு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.வேட்பு மனுதாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 52 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.இதுபோல் திருப்பூர் மாநகராட்சி மற்றும் பல்லடம், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, காங்கேயம் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளிலும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் ஏராளமானோர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சென்று வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்

0 comments: