Monday, September 26, 2016

On Monday, September 26, 2016 by Unknown in    

தாராபுரம்,தாராபுரம் அருகே அரசு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 வயது குழந்தையின் ஒரு கை துண்டான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.பஸ்கள் மோதல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சேவக்கம்பட்டியைச்சேர்ந்தவர் மணிகண்டன் விவசாயி. இவரது மனைவி அனிதா இவர்களுக்கு தேஷிகா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ்சில் பின்பக்க இருக்கையில் அனிதா குழந்தையுடன் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார்.பஸ் தாராபுரம் திருப்பூர் சாலையில் காதப்புள்ளபட்டிக்கு முன்புள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. குழந்தை தனது வலது கையை வெளியே நீட்டி விளையாடிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கோவையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், மணிகண்டன் பயணம் செய்த அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதியதால் விபத்து ஏற்பட்டது.வலது கை துண்டானதுஇந்த விபத்தில் குழந்தை தேஷிகாவின் வலது கை அதே இடத்தில் துண்டாகி கீழே விழுந்து விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் குழந்தை தேஷிகாவையும், துண்டாகிக்கிடந்த குழந்தையின் கையையும் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவிகள் செய்யப்பட்டது. துண்டான கையை டாக்டர்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தினார்கள்.பிறகு தேஷிகாவோடு அவரது கையையும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தேஷிகாவின் துண்டான கையை மீண்டும் பொருத்துவதற்கான சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது பெண் குழந்தையின் கை துண்டான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: