Monday, September 26, 2016

On Monday, September 26, 2016 by Unknown in    

திருப்பூர்திருப்பூர் மாநகராட்சி 25–வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மேட்டுபாளையம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள ஒரு வளைவில் மழைநீர் வடிகாலின் அகலம் அதிகமாக இருப்பதால், அந்த பகுதியில் வடிகாலின் மேல்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் மூலம் மூட மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.இந்தநிலையில் வடிகாலின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் திடீரென திருப்பூர் பி.என்.ரோட்டில் சாலைமறியல் செய்ய முயன்றனர். இதுபற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த பொதுமக்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: