Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    

மும்பை, கல்யாணில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது குளத்தில் தள்ளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 4 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.விநாயகர் சிலை கரைப்பு தானே மாவட்டம் கல்யாணில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அங்குள்ள தீஸ்காவ் குளத்திலும் கரைக்கப்பட்டு வருகின்றன.1½ நாள் வழிபாட்டுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் ஏராளமான சிலைகள் இந்த குளத்திற்கு கரைப்பதற்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.இதனால் குளத்தை சுற்றிலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இருந்தது. அங்கு கோல்சேவவாடி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலே (வயது38) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அவர் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தி கொண்டு இருந்தார்.குளத்திற்குள் தள்ளினர் அப்போது ஜெரிமெரி கணேஷ் உற்சவ் என்ற மண்டலை சேர்ந்தவர்கள் கூட்டத்தினரை இடித்து தள்ளியபடி குளத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.இதை கவனித்த சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலே அவர்களை மற்றவர்களை போல வரிசையில் வரும்படி அறிவுறுத்தினார். இது அந்த மண்டலை சேர்ந்தவர்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலேயிடம் அவர்கள் தகராறு செய்தனர்.இந்த தகராறு முற்றிய நிலையில் கடும் ஆத்திரம் அடைந்த அந்த மண்டலை சேர்ந்த நான்கு வாலிபர்கள் திடீரென சப்–இன்ஸ்பெக்டரை பிடித்து குளத்திற்குள் தள்ளி விட்டனர்.காப்பாற்ற முன்வராத அவலம் குளத்திற்குள் விழுந்து தத்தளித்த அவரை அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றார். ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலேயை காப்பாற்ற யாரும் முன்வராத அவலமும் அரங்கேறியது.இருப்பினும் சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலே சுதாரித்துக் கொண்டு அந்த ஆசாமியிடம் இருந்து தப்பி நீந்தி வெளியே வந்தார்.இந்த அனைத்து நிகழ்வையும் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் தனது செல்போன் படம் பிடித்து வலைதளத்தில் வெளியிட்டார். இந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.4 பேருக்கு வலைவீச்சு இதற்கிடையே சம்பவம் குறித்து சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலே கோல்சேவாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வாலிபர்கள் 4 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.அந்த நான்கு வாலிபர்களும் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கொலை முயற்சிக்கு உள்ளான இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

0 comments: