Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

போபால், அம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் அரசு மத்திய பிரதேசதம் மாநிலத்தில் ரூ. 10க்கு 'தாளி' உணவை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.தமிழ் நாட்டில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய 'அம்மா உணவகம்' திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏழை - எளிய மக்கள் மிக குறைந்த செலவில் வயிறார சாப்பிடுவதால் அம்மா உணவகம் திட்டம் மற்ற மாநிலங்களிலும் பாராட்டுப் பெற்றுள்ளது. பல மாநிலங்கள் தமிழ் நாட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி, அம்மா உணவகம் பற்றி ஆய்வு செய்து தங்கள் மாநிலத்தில் அது போன்று அமல்படுத்த ஏற்பாடு செய்து வருகின்றன. அம்மா உணவகம் திட்டத்தை பார்த்து ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகளும் தங்களுடைய மாநிலங்களில் மலிவு விலையில் அரசு உணவு விற்பனையை தொடங்கினர்.இவ்வரிசையில் இப்போது மத்திய பிரதேச மாநில பா.ஜனதா அரசு இணைந்து உள்ளது. அம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் அரசு மத்திய பிரதேசதம் மாநிலத்தில் ரூ. 10-க்கு 'தாளி' உணவை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.மத்திய பிரதேசத்தில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை செப்டம்பர் 25-ம் தேதி தொடங்க பாரதீய ஜனதா அரசு திட்டமிட்டு உள்ளது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாளான 25-ம் தேதி தொடங்க திட்டமிட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சப்பாத்தி, பருப்பு, சாதம், காய்கறிகள் மற்றும் உறுகாய் அடங்கிய ’தாளி’ உணவை ரூபாய் 10-க்கு விற்பனை செய்ய சவுகான அரசு முடிவு செய்து உள்ளது. முதலில் மலிவு விலை உணவகங்களை குவாலியர், போபால், இந்தூர் மற்றும் ஜாபல்பூரில் தொடங்கப்பட உள்ளது

0 comments: