Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    


பெங்களூரு: கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்திற்கு, அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல கன்னட அமைப்புகள் பேரணி, மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பு என பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், கன்னட ஜக்குருதி வேதிக என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் 200க்கும் தமிழக முதல்வர் ஜெ., போஸ்டருடன் வந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எந்த வாகனத்தையும் அவர்கள் விடவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து கர்நாடகா செல்ல வேண்டிய வாகனங்கள், தமிழக எல்லைலேயே போலீசார் நிறுத்தி வருகின்றனர். எந்த வாகனத்தையும் அதற்கு மேல் அனுமதிக்கவில்லை. கர்நாடகாவிலிருந்து எந்த வாகனமும் தமிழகத்திற்குள் வரவில்லை. தமிழகத்திற்குள் வர வேண்டிய ஒரு சில லாரிகள் மாற்றுப்பாதையில் வருகின்றன. கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தமிழக சேனல்கள் ஒளிபரப்பை கேபிள் டிவி சங்கங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

காவிரி நீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும். இல்லையென்றால், 1991ல் நடந்த கலவரம் மீண்டும் நடக்கும். தமிழர்களின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் புகுந்து தாக்குதல் நடத்த வேண்டும் என கர்நாடகா ரக்ஷன வேதிகா அமைப்பு டிவி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கோயம்பேட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பஸ்களும் கிருஷ்ணகிரி வரை தான் செல்வதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநில அரசிற்கு சொந்தமான பஸ்கள் கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து வர வேண்டிய காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

0 comments: