Saturday, September 10, 2016
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கன்னட திரையுலகினர் நேற்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய ரசிகரை நடிகர் சிவராஜ்குமார் வன்மையாக கண்டித்தார்.
பெங்களூருவில் உள்ள சிவானந்தா சதுக்கத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், உபேந்திரா, ஜக்கேஷ், தேவராஜ், நடிகைகள் பாரதி விஷ்ணுவர்தன், மாளவிகா, சஞ்சனா, ராகினி திவேதி, சுருதி உட்பட பலர் பங்கேற்றனர்
கர்நாடக. முதல்வர் சித்தராமை யாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய நடிகர், நடிகைகள், கர்நாடகாவுக்குச் சொந்த மான காவிரியை அபகரிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா முயல்வதாக ஆவேசக் குரல் எழுப்பினர்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளி யான ‘நிமிர்ந்து நில்' தமிழ் திரைப் படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி, ‘‘தமிழகத்துக்கு ஒரு போதும் காவிரி நீர் தர முடியாது’’ என கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் சிவராஜ் குமார், ‘‘கர்நாடகா வாழ் தமிழர்கள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும். இங்கு நடிகர்கள் சுதீப் வரவில்லை, அம்பரீஷ் வரவில்லை என்கிறார்கள். கன்னட திரையு லகைச் சேர்ந்த ஒருவர் வந்தாலே, மற்றவர்கள் வந்ததற்கு சமம் தான். எனவே திரையுலகினரைக் குறை சொல்லாமல், ஆள் பவர்களைத் தட்டிக்கேளுங்கள். பங்காரப்பா முதல்வராக இருந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல் கர்நாடகாவின் நன்மைக்காக முடிவெடுத்தார்’’ என பேசினார்.
அப்போது ரசிகர் ஒருவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவராஜ்குமார், ‘‘எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு பெண் என்பவர் எப்போதும் பெண்தான். எனவே எந்தப் பெண்ணையும் தரக்குறைவாக பேசக்கூடாது. தமிழகம் நமது அண்டை மாநிலம் தான். அண்டை நாடு கிடையாது. இந்தியர்கள் என்ற மனப்பான்மை அனைவருக்கும் வேண்டும். கர்நாடகாவைப் போன்றே தமிழகத்திலும் விவசாயிகள் துன்பத்தில் உள்ளனர்.
ஒரு விவசாயியின் வலியை மற்றொரு விவசாயால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். எனவே தற்போது உள்ள நீரை பகிர்ந்து கொள்வது குறித்து இரு மாநில விவசாயிகளும் இணைந்து பேசி தீர்வு காண வேண்டும். இதில் யாரும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது’’ என்றார்
Friday, September 09, 2016
பெங்களூரு: கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்திற்கு, அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல கன்னட அமைப்புகள் பேரணி, மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பு என பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், கன்னட ஜக்குருதி வேதிக என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் 200க்கும் தமிழக முதல்வர் ஜெ., போஸ்டருடன் வந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எந்த வாகனத்தையும் அவர்கள் விடவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து கர்நாடகா செல்ல வேண்டிய வாகனங்கள், தமிழக எல்லைலேயே போலீசார் நிறுத்தி வருகின்றனர். எந்த வாகனத்தையும் அதற்கு மேல் அனுமதிக்கவில்லை. கர்நாடகாவிலிருந்து எந்த வாகனமும் தமிழகத்திற்குள் வரவில்லை. தமிழகத்திற்குள் வர வேண்டிய ஒரு சில லாரிகள் மாற்றுப்பாதையில் வருகின்றன. கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தமிழக சேனல்கள் ஒளிபரப்பை கேபிள் டிவி சங்கங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
காவிரி நீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும். இல்லையென்றால், 1991ல் நடந்த கலவரம் மீண்டும் நடக்கும். தமிழர்களின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் புகுந்து தாக்குதல் நடத்த வேண்டும் என கர்நாடகா ரக்ஷன வேதிகா அமைப்பு டிவி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கோயம்பேட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பஸ்களும் கிருஷ்ணகிரி வரை தான் செல்வதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநில அரசிற்கு சொந்தமான பஸ்கள் கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து வர வேண்டிய காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப் பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படுகிறது. இதில் பாஜக, மஜத உட்பட ஆயிரத்துக்கும் மேற் பட்ட கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற் கின்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீரும் செவ்வாய் நள்ளிரவு காவிரியில் திறந்துவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து 4-வது நாளாக நேற்றும் மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் கன்னட அமைப்பினரும் விவசாய அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்த போராட்டக்காரர்கள் சாலையிலே சமைத்து உண்ணும் போராட்டத்தை நடத்தினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலின் உருவ பொம்மைகளை எரித்தனர்.
Thursday, September 08, 2016
கர்நாடகாவில் நாளை பந்த் !
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படுவதைக் கண்டித்து கர்நாடக மாநிலத்தில் நாளை முழு அடைப்பு. கர்நாடக விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் இதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம். தமிழ் டிவி சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, September 07, 2016
உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க தமிழகத்துக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,000 கன அடி தண்ணீர், கபினி அணையில் இருந்து 5000 கன அடி தண்ணீர் என மொத்தம் 15,000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
மைசூர், மாண்டியா பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரங்களில் பந்தலிட்டு சமைத்து சாலையில் அமர்ந்து சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கே.ஆர்.எஸ். அணைப் பகுதியில் பிரம்மாண்ட பேரணிக்கு கன்னட ரக்ஷன வேதிக, ஜெய் கர்நாடகா சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
பேருந்துகள் நிறுத்தம்:
ஒசூரில் தமிழக - கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகள் எல்லையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல் கர்நாடகாவிலிருந்தும் தமிழகத்துக்குள் பேருந்துகள், வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்
தமிழகத்திலிருந்து வந்த பேருந்துகளை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி எதிர்ப்பு வாசகங்களை பதிவு செய்யும் கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் | படம்: கே.முரளிகுமார்.
மாநில அரசுக்கு கண்டனம்..
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு மாநில அரசே காரணம் எனக் கூறி பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் சித்தராமைய்யா உருவ பொம்மையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக பாஜக பிரமுகரும் மேலவை எதிர்க்கட்சித் தலைவருமான ஈஸ்வரப்பா கூறும்போது, "கர்நாடக அரசு காவிரி விவகாரத்தை திறமையாக கையாளவில்லை. இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி எஸ் நாரிமனும் சிறப்பாக செயல்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் யாருடைய ஒப்புதலைப் பெற்று அவர் 10,000 கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்துவிடுவதாக ஒப்புதல் அளித்தார் என்பது தெரியவில்லை. காவிரி வழக்கில் கர்நாடகா சார்பில் இனியும் நாரிமன் வாதிட அனுமதிக்கக் கூடாது" என்றார்.
தமிழர்கள் பகுதியில் பாதுகாப்பு:
கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான சிவாஜி நகர், விவேக் நகர், அல்சூர், கிழக்கு பெங்களூரூ முழுவதும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாண்டியா, மைசூரு திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடல் நிறுத்தப்பட்டன. பெங்களூரு நகருக்குள் மட்டும் ஓரிரண்டு அரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அதுவும் இன்றைக்கு நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.
முதல்வர், உள்துறை அமைச்சர் வேண்டுகோள்:
மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், காவிரி விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது, மக்கள் வன்முறையை விடுத்து அமைதி காக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்
Tuesday, September 06, 2016
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்த்துள்ளன.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி மண்டியா, மைசூரு, சாமராஜ்பேட்டை, உப்பள்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்ற 50-க்கும் மேற்பட்டோர் செய்யப்பட்டனர். மண்டியா, மைசூரு, சாமராஜ்பேட் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மண்டியாவில் இன்று முழு அடைப்பு: இதனிடையே, மண்டியாவில் காவிரி நலன் பாதுகாப்புக்குழு கூட்டம் முன்னாள் எம்பி ஜி.மாதேகெளடா தலைமையில் நடந்தது. இதில், செவ்வாய்க்கிழமை மண்டியா மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
9-இல் கர்நாடக முழு அடைப்பு: பெங்களூரில் திங்கள்கிழமை கன்னட சலுவளி கட்சித்தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடிய கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர், செப்.9-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
மேலும், பெங்களூரில் உள்ள ரிச்மண்ட் சாலையில் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். டவுன்ஹாலில் கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர் அதன் தலைவர் டி.ஏ.நாராயணகெளடா தலைமையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தி, உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினர்.
தீர்ப்பு குறித்து முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியது: தீர்ப்பு நகல் செவ்வாய்க்கிழமை காலைக்குள் கிடைத்துவிடும். காலை 10 மணிக்கு சட்டவல்லுநர்களின் ஆலோசனை பெறப்படும். பின்னர், விதானசெளதாவில் மாலை 3 மணிக்கு அனைத்துக்கட்சிக்கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்
Friday, May 13, 2016
Wednesday, October 01, 2014
Sunday, September 14, 2014
Thursday, September 04, 2014
Total Pageviews
News
Pages
Popular Posts
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...