Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    

       தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கன்னட திரையுலகினர் நேற்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய ரசிகரை நடிகர் சிவராஜ்குமார் வன்மையாக கண்டித்தார்.

பெங்களூருவில் உள்ள சிவானந்தா சதுக்கத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், உபேந்திரா, ஜக்கேஷ், தேவராஜ், நடிகைகள் பாரதி விஷ்ணுவர்தன், மாளவிகா, சஞ்சனா, ராகினி திவேதி, சுருதி உட்பட பலர் பங்கேற்றனர்

                                                           கர்நாடக.   முதல்வர் சித்தராமை யாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய நடிகர், நடிகைகள், கர்நாடகாவுக்குச் சொந்த மான காவிரியை அபகரிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா முயல்வதாக ஆவேசக் குரல் எழுப்பினர்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளி யான ‘நிமிர்ந்து நில்' தமிழ் திரைப் படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி, ‘‘தமிழகத்துக்கு ஒரு போதும் காவிரி நீர் தர முடியாது’’ என கூறினார்.

பின்னர் பேசிய நடிகர் சிவராஜ் குமார், ‘‘கர்நாடகா வாழ் தமிழர்கள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும். இங்கு நடிகர்கள் சுதீப் வரவில்லை, அம்பரீஷ் வரவில்லை என்கிறார்கள். கன்னட திரையு லகைச் சேர்ந்த ஒருவர் வந்தாலே, மற்றவர்கள் வந்ததற்கு சமம் தான். எனவே திரையுலகினரைக் குறை சொல்லாமல், ஆள் பவர்களைத் தட்டிக்கேளுங்கள். பங்காரப்பா முதல்வராக இருந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல் கர்நாடகாவின் நன்மைக்காக முடிவெடுத்தார்’’ என பேசினார்.

அப்போது ரசிகர் ஒருவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவராஜ்குமார், ‘‘எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு பெண் என்பவர் எப்போதும் பெண்தான். எனவே எந்தப் பெண்ணையும் தரக்குறைவாக பேசக்கூடாது. தமிழகம் நமது அண்டை மாநிலம் தான். அண்டை நாடு கிடையாது. இந்தியர்கள் என்ற மனப்பான்மை அனைவருக்கும் வேண்டும். கர்நாடகாவைப் போன்றே தமிழகத்திலும் விவசாயிகள் துன்பத்தில் உள்ளனர்.

ஒரு விவசாயியின் வலியை மற்றொரு விவசாயால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். எனவே தற்போது உள்ள நீரை பகிர்ந்து கொள்வது குறித்து இரு மாநில விவசாயிகளும் இணைந்து பேசி தீர்வு காண வேண்டும். இதில் யாரும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது’’ என்றார்

0 comments: