Monday, December 28, 2015
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி போர்கால நடவடிக்கைகளாக மீட்பு மற்றும் நிவாரணப்பனிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது இந்திய வானிலை ஆராய்ச்சிமையம் எதிர்வரும் 27.12.2015 மற்றும் 28.12.2015ஆகிய இருதினங்கள் தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 27.12.2015 நடைபெற்றது.இக்கூட்டத்தில் கண்காணிப்பு ஆணையர் செந்தில்குமார், காவல்துறை தலைவர் (அமலாக்கப்பிரிவு) அபய்குமார்சிங்;., ஆகியோர் கலந்துகொண்டார்கள் .
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார் இஆப., அவர்கள் பேசும் போது
வடகிழக்கு பருவமழையின் காரணமாக 27.12.2015 மற்றும் 28.12.2015 ஆகிய இரு தேதிகளில் தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் 23.12.2015 ம் தேதிய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை வரப்பெற்றதின் பேரி;ல் தமிழக அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் திரு. செந்தில்குமார் இ.ஆ.ப அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார்கள். மேலும் காவல் துறை பணிகளை ஒருங்கிணைக்க காவல் துறை தலைவர் திரு.அபய் குமார் சிங் இ.கா.ப அவர்களும் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு பணிக்காக தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவில் இருந்து தலா 35 நபர்கள் அடங்கிய ஐந்து குழுக்கள் தமிழக அரசினால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே 35 நபர்களை கொண்ட பேரிடர் மீட்பு குழு ஒன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. எனவே வானிலை ஆய்வு மைய முன்னெச்சரிக்கையின் படி 27.12.2015 மற்றும் 28.12.2015 ஆகிய தேதிகளில் கனமழை பெய்திடின் அதனால் ஏற்படும் பேரிடர்களில் இருந்து மக்களை காப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது என வருவாய்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 83 தற்காலிக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.அங்குள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, போர்வை,ஜெனரேட்டர்,குடிநீர்வசதி போன்றவைகள் வழங்கப்பட வேண்டும்.
மேலும் அனைத்து நீர் நிலைகளிலும் பொதுப்பணித்துறை நீh ;வள ஆதார அமைப்பு மூலம் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதி மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்படின் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்;ல ஏதுவாக தயார் நிலையில் இருக்கும்படியும் வருவாய்துறை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும்; மாவட்டத்தில் 83 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது 26.12.2015 தேதிய வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி 27.12.2015 தேதியன்று தமிழகத்தின் கடலோர மாவட்டஙக்ளில் ஒருசில இடங்களில் மழையோ, இடியுடன் கூடடிய கனமழையோ பெய்யக்கூடும் எனவும் 28.12.2015 தேதியன்று தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் கனமழையை எதிர்கொள்ளும் பொருட்டும் நிவாரண பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளும் பொருட்டு தயார் நிலையில் உள்ளது இவ்வாறு பேசினார்.
இவ்வாலோசனைக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ்,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகைய்யா, சார்ஆட்சியர் திரு.கோபலசுந்தர்ராஜ்.,இ.ஆ.ப., கோட்டாச்சியர்கள் டாக்டர்.,.கண்ணபிராண், திரு.தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
0 comments:
Post a Comment