Tuesday, December 29, 2015

On Tuesday, December 29, 2015 by Unknown in , ,    
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் இந்து ஆதிதிராவிடர்களுக்கான கீழ்க்கண்ட பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.260.97 லட்சம் மான்ய நிதி ஒதுக்கீடு செய்து ஆன்லைன் மூலம் கடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. மகளிர் நிலம் வாங்கும் திட்டம் பெண்களுக்கானது

2. நிலம் மேம்பாடு திட்டம்-இருபாலாருக்கும்

3. தொழில் முனைவோர் பொருளாதார திட்டம்

4. பெட்ரோல்/டீசல்/கேஸ் சில்லரை விற்பனை நிலையம்

5. இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத்திட்டம்

6. M.B.B.S., M.S., B.S., B.D.S., B.P.T., D.Pharm/B.Pharm, Lap technician / Para Medicial centre படிப்பு முடித்து அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் உரிய பதிவுகள் செய்தவர்களுக்கு மருத்துவமனை, மருந்துகடை, கண்கண்ணாடியகம், முடநீக்கு மையம், இரத்த பரிசோதனை நிலையம் அமைத்திட

7. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி (ம) பொருளாதார கடனுதவி

8. கலப்பு குழுக்களுக்கான சுழல்நிதி (ம) பொருளாதார கடனுதவி (ஆண் (ம) பெண் இருபாலாரும்

9. ஆண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி (ம) பொருளாதார கடனுதவி

10. திருநங்கைகள் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி (ம) பொருளாதார கடனுதவி

11. மாற்றுத் திறனாளிகள் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி (ம) பொருளாதார கடனுதவி

12. மாவட்ட ஆட்சியர் விருப்பநிதி

13. மேலாண்மை இயக்குநர் விருப்புரிமைநிதி

14. இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி

15. தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி-1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி

16. சட்டபட்டதாரிகளுக்கு நிதியுதவி

17. பட்டயகணக்கர்/செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க நிதியுதவி

மானியத்துடன் கூடிய கடன் உதவிபெற விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக 18 வயது நிரம்பியவராகவும் 55 வயதிற்குட்பட்டவராகவும், இளைஞர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் வயது 18 முடிந்து 35-க்குள்ளும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.1 இலட்சம் ஆகும்.

பெட்ரோல்/டீசல்/கேஸ் சில்லரை விற்பனை நிலையம் அமைத்திடவும், மருத்துவம் சார்ந்த தொழிலுக்கும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சம் ஆகும். குழுக்களுக்கான தொழில் துவங்கும் உறுப்பிர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 லட்சத்துக்குள்ளும், வயது 18 முடிந்து 60-க்குள்ளும் இருத்தல் வேண்டும். சட்டபட்டதாரிகளுக்கு நிதியுதவி (ம) பட்டயகணக்கர்/செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க நிதியுதவி ஆகிய இனங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை. தமி;ழ்நாடு தேர்வாணைய தொகுதி-1 திட்டத்தின்கீழ் பயன்பெற 21 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அதேப்போன்று பட்டயகணக்கர்/செலவு கணக்கர்கள் சொந்தமாக தொழில் துவங்க வயது 25 முதல் 45-க்குள்ளும் இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் பற்றிய விவரங்களுடன் குடும்ப அட்டை/ இருப்பிட சான்று, சாதிச்சான்று, வருமானச்சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதாரச்சான்றிற்கு (பள்ளி மாற்றுச்சான்று/ வாக்காளர் அட்டை/ ஒட்டுநர் உரிமம்/ பான்கார்டு/ ஆதார் அட்டை/ மதிப்பெண்சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் TIN நம்பர் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு திட்டஅறிக்கை மற்றும் விண்ணப்பதாரரின் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூலப்பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்கசான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நிலப்பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதிச்சான்ற விபரங்களை பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்கள் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20/- செலுத்தி விண்ணப்பிக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட  ஆட்சியர் ரவிகுமார் கேட்டுகொண்டுள்ளார்கள்.

0 comments: