Wednesday, December 31, 2014

On Wednesday, December 31, 2014 by Unknown in ,    


கோட்சேவுக்கு சிலை அமைக்க கூடாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் பிறந்த நாள் விழா, காங்கயம் அருகே உள்ள அவரது பிறந்த ஊரான குங்காருபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலர் கங்கா எஸ்.சக்திவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் கொங்கு ஈஸ்வரமூர்த்தி, வெள்ளக்கோவில் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கலந்து கொண்ட கொமதேக கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களோடு, அரசு ஆக்கப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்திருந்தால், தற்போது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றிருக்காது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கோட்சேவுக்கு சிலை வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வருகின்றன. கோட்சேவுக்கு சில வைக்கிற முயற்சி முற்றிலும் தவறானது. அதை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்றார்.
இதில், கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவைத் தலைவர் ஆர்.தேவராஜன், கொமதேக மாநில துணைச் செயலர் சக்திகோச் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: