Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Unknown in ,    
வெங்கிட்டாபுரம் கிராமத்தில் மின்மயானம் அமைப்பதற்கு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பல்லடம் வட்டம் வெங்கிட்டாபுரம் கிராம மக்கள் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
பல்லடம் நகர மக்களுக்காக வெங்கிட்டாபுரம் குடியிருப்புப் பகுதியில் மின் மயானம் அமைப்பதாகத் தெரிகிறது. இந்தப் பகுதியில் சுமார் 1,500க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந்தப் பகுதியில் மின்மயானம் அமைப்பதால், அப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் இப் பகுதியிலுள்ள நீர்நிலைகளும் மாசுபடும் அபாயம் நிலவுகிறது.
பல்லடத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இந்த மின்மயானம் அமைய இருப்பதால், பல்லடம் பகுதி மக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படக் கூடும். எனவே, வெங்கிட்டாபுரம் கிராமத்தில் மின்மயானம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு வேறு இடத்தில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: