Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Unknown in ,    

திருப்பூரில் ஆதார் அட்டை வழங்குவதில் முறைகேடுகள் நடந்து வருவதாக பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது: விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாநகராட்சி, மண்டல அலுவலகங்களிலும் நடந்து வருகிறது. ஏற்கெனவே விண்ணப்பித்து புகைப்படம் எடுத்தவர்களுக்கு ஆதார் அட்டை கிடைக்காமலும், புகைப்படம் எடுத்த நகலை கொண்டு சென்று காண்பித்தால் தள்ளுபடி ஆகிவிட்டதாகக் கூறி மீண்டும் விண்ணப்பிக்கவும் கூறுகின்றனர். மேலும், இரு முறைக்கு மேல் எடுத்தவர்களுக்கும் அதே பிரச்னை என்று கூறுகின்றனர். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால், தொழில்நுட்பப் பிரச்னை என்கின்றனர்.
இதனால் வயதானவர்களும், நோயாளிகளும், பொதுமக்களும் நாள்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, நன்கு ஆய்வு செய்து இனிமேல் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க புதிதாக கணினி மற்றும் ரேகை பதிவு செய்யும் உபகரணங்களையும் வழங்கி, அந்தந்த வார்டுகளுக்கு சென்று, பொதுமக்களுக்கு ஒரே முறையில் ஆதார் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், பல பகுதிகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது. இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: