Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Unknown in ,    
திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ஐஎன்டியூசி தேசிய செயலர் என்.நஞ்சப்பன் பேசியது: மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜக அதிகப்படியான அளவுக்கு பெருநிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி வசூலித்துள்ளது. அவற்றுக்கு கைமாறாக மத்திய பாஜக அரசு இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு ஒன்றரை ஆண்டுகளே ஆன, இந்தச் சட்டத்தால் கிடைத்துள்ள பலன்களை ஆராயாமல் அந்தச் சட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு சாதகமான திருத்தங்களைச் செய்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு நிலங்களைக் கையகப்படுத்தி பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்கு மாநில அரசு ஆதரவு தரக் கூடாது. தமிழக அரசு கொடுத்துள்ள ஆதரவையும் திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலர் கே.சிரஞ்சீவி பேசியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டம் விவசாயிகளின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. இது தொழில்துறை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமானது. இதனால்தான் காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறது. மத்திய அரசு நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சி நிர்வாகிகள் கோபி, சித்திக் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

0 comments: