Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Unknown in ,    
தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், அரசின் ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக, எரிவாயு உருளை விநியோகிப்புத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,500 வழங்க தொழிலாளர் நலத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காஸ் ஏஜென்சிகளில் இந்தத் தொகை சரிவர வழங்கப்படுவதில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இந் நிலையில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம் மனுவில், அவிநாசி பகுதியில் இயங்கும் 2 காஸ் ஏஜென்சிகள், கடந்த 17ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு பணி வழங்காததால், அந்தக் காஸ் ஏஜென்சி குடோன் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இந் நிலையில், தொழிலாளர் நல அலுவலர் முன்னிலையில் 3 முறை நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
வரும் 25ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாவிட்டால், தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆட்சியரிடம் அணுகி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகள் போன்ற அரசின் ஆவணங்களை ஒப்படைக்கப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments: