Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Unknown in ,    
பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 19ஆவது வார்டு, நெருப்பெரிச்சல், ஜி.என்.கார்டன், தோட்டத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந் நிலையில், அப் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருவதாக அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
எனினும், குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வந்ததை அடுத்து ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாறைக்குழியில் குப்பைக் கழிவுகளை கொட்டக் கூடாது என்று வலியுறுத்தி, மாநகராட்சி செயற்பொறியாளர் ரவியிடம் மனு அளித்தனர்.
 மனு விவரம்: பூலுவப்பட்டி, ஐஸ்வர்யா நகர் பாறைக்குழியில் குப்பைக் கழிவுகளை கொட்டியதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. தற்போது நீர்நிரம்பிய நிலையில் உள்ள நெருப்பெரிச்சல் பகுதி பாறைக் குழியில், மாநகர்ப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவு கொட்டப்படுகிறது. இதனால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
உடனடியாக நெருப்பெரிச்சல் பகுதியிலுள்ள பாறைக்குழியில் குப்பை கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இதுதொடர்பாக மேயர், ஆணையரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்

0 comments: