Tuesday, November 18, 2014

On Tuesday, November 18, 2014 by Unknown in ,    

கரூர் பஸ் நிலையத்தில் ஓடும் இலவச கழிப்பிட கழிவுநீர் நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு  கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை குறித்து வந்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதனடிப்படையில், இஸ்லாமிய உலமாக்கல் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகம் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களுக்கு நல உதவிகள் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் பதிவு போன்றவை பணிகளும் தாமதமாகி வருகின்றன. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களின் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி நாகராஜ் அளித்த மனுவில், தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள சாலையை தார் சாலையாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலவிடுதி காவல் நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ரத்தினம் தெருவில் உள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரும், கரூர் பஸ் நிலைய வளாகத்தில் இலவச, கழிப்பிட கழிவு நீர் பஸ் நிலையம் மத்தியில் பரவி வருவதை தடுக்க வேண்டும், பஸ் நிலைய பயணிகள் நடைபாதை ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மாலை நேரங்களில் பஸ்களில் அதிக கூட்டம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட குடிநீர், இணைப்புகளுக்கு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கிட வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர் அருணாசலம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடிப்படை வசதிகள் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் மனுக்கள் வழங்கப்பட்டன.

0 comments: