Tuesday, November 18, 2014

On Tuesday, November 18, 2014 by Unknown in ,    

டாஸ்மாக் ஊழியரிடம் தகராறு: ஒருவர் கைது                                                                             கரூரில் டாஸ்மாக் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

கரூரை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் அப்பகுதியில் உள்ள தியேட்டர் அருகே  ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5 மணி அளவில் அங்கு வந்த வெங்கமேட்டை சேர்ந்த பொன்னுசாமி(53) என்பவர் கடையை திறக்கச் சொல்லியும், சரக்கு தரச்சொல்லியும் கார்த்திக்கிடம்  தகராறு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் பொன்னுசா மியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.                 

0 comments: