Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    






கோவை,: கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தவர் கற்பகம். இவர் நேற்று பணியிடம் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் அண்ணாமலை பல்கலைகழக வருவாய் அலுவலராக பணியாற்றிய கிறிஸ்து ராஜ் மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பதவியேற்றார். சென்னையை சேர்ந்த இவர் கடந்த 2005ம் ஆண்டில் குரூப்1 தேர்வில் வெற்றி பெற்றார். நாகப்பட்டணத்தில் ஆர்.டீ.ஓ ஆகவும், கரூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற கிறிஸ்து ராஜூக்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வாழ்த்து தெரிவித்தார். புதிய மாவட்ட வருவாய் அலுவலரை கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தாசில்தார்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கிறிஸ்து ராஜ் கூறுகையில், ‘‘ அரசின் நல திட்டங்கள் ஏழை மக்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். 
மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சியில் எனது பங்களிப்பு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிலங்களை பெற்று தந்து பணிகளை விரைவுபடுத்துவேன்,’’ என்றார்.

0 comments: