Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    


தண்டையார்பேட்டை, : மனைவியை பற்றி ஆபாசமாக பேசியதால் தலையில் கல்லைப்போட்டு சமையல்காரரை கொலை செய்தேன் என்று பிடிபட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் குமார் (40). சமையல்காரர். இவர், கடந்த 6ம் தேதி ராயபுரம் சிங்கார தோட்டம் பகுதியில் தலை யில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ராயபுரம் போலீசார், 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். குமாருடன் பணியாற்றிய மாரியப்பன் (30) என்பவரை விசாரணைக்கு அழைத்தபோது அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார். 
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், தென்காசி அருகே இலஞ்சி என்ற கிராமத்தில் மாரியப்பன் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். மாரியப்பனை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாரியப்பன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘நானும் சமையல் வேலை செய்தேன். குமார் சரியாக சம்பள பணம் கொடுக்க மாட்டார்.  மேலும் என்னுடைய சம்பளத்தை வாங்கி மது வாங்கி குடித்துவிடுவார். கடந்த 6ம் தேதி இருவரும் மது குடித்தோம். அப்போது என் மனைவி பற்றி குமார் ஆபாசமாக பேசியதால் தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை தாக்கினேன். தொடர்ந்து என் மனைவியை பற்றி மேலும் ஆபாசமாக பேசினார். இதனால் கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 
இதையடுத்து, குமாரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

0 comments: