Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown in ,    








தமிழ்நாடு கதர் கிராமத்தொழில்  வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக  பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர்  மாவட்டத்தில் 25 நபர்களுக்கு  6மாத காலத்திற்கு நவீன  ஆயுத்த ஆடைகள்  வடிவமைப்பு   தையல் தொழிற்திறன் மேம்பாட்டு பயுற்சி அளிக்கப்பட்டது .  இப்பயுற்சி 24-8-2014 வுடன் . முடிவடைந்து அதற்க்கான நிறைவு விழா  மற்றும்  தொழிற் பயுட்சிக்கான சான்றிதல் வழங்கும் விழாவும் - 01-09-2014.திருப்பூர்  குமார் நகரில் உள்ள  கதர் கிராமத் தொழில் அலுவலகத்தில் நடைபெற்றது . இதனில்  திரு .  பி .ரங்கசாமி அவர்கள்  பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் திருப்பூர்  மற்றும் திரு .வி .கணேஷன்  அவர்கள் , முன்னோடி வங்கி மேலாளர் , திருப்பூர் மற்றும் .திரு . ஜெ.ஜெயக்குமார்  மண்டலத்துணை இயக்குனர் . திரு .வி வி .ரவிக்குமார் .உதவி இயக்குனர்  கதர் கிராமத் தொழில்கள் திருப்பூர்  அவர்களும் கலந்து கொண்டார்கள் . இத்தொழிற்திறன்  மேம்பாட்டு  பயுற்சி  முடிக்கப்பட்ட பயனாளிகள் 25 நபர்களுக்கு  மாத உதவித்தொகையாக  ரூபாய் 1650/-வழங்கப்பட்டது . இப்பயுட்சியின் முடிக்கப்பட்ட பயனாளிகளுக்கு  புதியதாக தொழில் தொடங்க மாவட்ட  தொழில்  மையம்  கதர் ஆணைக்குழு மற்றும் கதர் கிராமத்  தொழில் வாரியத்தின் மூலம் பாரத  பிரதமர்  வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்   வங்கிகளின் மூலம் அரசு மான்யத்துடன்  கூடிய கடனுதவி வழங்கப்படும் எனவும்  மாவட்ட தொழில் மையம் மூலம் கூடுதலாக  வேலைவாய்ப்பற்ற இளைங்கர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்  திட்டம்  புதிய  தொழில் முனைவோர் மற்றும் தொழிற்திறன்  மேம்பாட்டுதிட்டம்  ஆகியவற்றின் வங்கிக்கடன்  வழங்கப்படும் என்று  மாவட்ட தொழில் மைய மேலாளர்  திரு .ரங்கசாமி தெரிவித்தார் .

0 comments: