Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown in ,    





தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தனி வட்டாட்சியர் நகர நிலவரித் திட்டம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 வார்டுகளில் உள்ள வீட்டு மனைகளுக்கு தற்காலிக பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது 30 வார்டுகளில் இரண்டு மாதத்திற்கு இரண்டு வார்டுகள் வீதம் அனைத்து குடியிருப்புகளுக்கும் இது சம்பந்தமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகரத்திற்கு உட்பட்ட 2வது வார்டு, சித்தராவுத்தன்பாளையம், காட்டூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு பல முறை விண்ணப்பித்தும் பட்டா வழங்கப்படவில்லை. 
தற்போது அறிவிப்புகள் வெளியான போதும், போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இவர்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நேற்று நகர நிலவரித் திட்ட அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய ஆவணங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

0 comments: