Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி அளித்த பேட்டி, எங்களது நாளிதழில் கடந்த 4-ந் தேதி வெளியானது. இதில், தமிழக அரசையும், முதல்-அமைச்சரையும் குறித்து அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி எங்கள் மீதும், சுப்பிரமணியசாமி மீதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர, தமிழக பொதுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, எங்களை வருகிற அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். இந்த செய்தியை உள்நோக்கத்துடன் நாங்கள் வெளியிடவில்லை. எனவே, இந்த சம்மனை ரத்து செய்யவேண்டும். அவதூறு வழக்கு தொடர்பான அரசாணையையும் ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், மனுதாரர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0 comments: