Saturday, September 20, 2014
குண்டர் தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜூ, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
குண்டர் சட்டம்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வங்காள மாகாணத்தில் 1923-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டம் முதலில் அமல்படுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக பிற மாகாணங்களில் இந்த சட்டம் இயற்றப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும், போதைப்பொருள், கள்ளச்சாராயம் கடத்தல், விபசாரம், கொலை, கொள்ளை உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தவும், அவர்களை ஓர் ஆண்டுக்கு ஜெயிலில் அடைக்கவும், 1982-ம் ஆண்டு தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
சட்டத்திருத்தம்
இதுபோன்ற தடுப்பு காவல் சட்டம், ஜனநாயக நாடுகளில் அமல்படுத்தப்படவில்லை. போர் காலங்களில் இங்கிலாந்து நாட்டில் தற்காலிகமாக மட்டும் இந்த சட்டம் அமல்படுத்தது. தமிழக அரசு 1982-ம் ஆண்டு இயற்றிய குண்டர் தடுப்பு சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதில், சைபர் குற்றம் மற்றும் பாலியல் குற்றத்தை ஒரு முறை செய்தவர்களை கூட குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் விதமாக சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஏற்கனவே இருந்த ‘தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள்’ என்ற வார்த்தை நீக்கியுள்ளது.
சமூக வலைதளம்
இந்த சட்டத்திருத்தம், அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை பறிக்கும் விதமாக உள்ளது. மேலும், இந்த சட்டத்தை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதனால் பேச்சுரிமையை இழப்பதுடன், எந்த விதமான பாவணைகளிலும் தங்களது உணர்வை ஒருவரால் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இதுபோன்ற அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டால், அவர்கள் ஒரு தகவலை வெளிவரவிடாமல் தடுக்க முடியும். தற்போது, அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர்களின் ஊழல் முறைகேடுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகுகிறது. இந்த சட்டத்திருத்தின் மூலம் இதுபோன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவரவிடாமல் அரசால் தடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பதில் அளிக்க வேண்டும்
எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் செல்லாது என்று அறிவிக்கவேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும். அந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த அரசுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு வந்தது. அப்போது, வக்கீல் கே.இந்திரா ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘இந்த வழக்கிற்கு தமிழக தலைமை செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் மனுக்கள் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை நவம்பர் 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment